தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது.
ஒரு சில இடங்களைத் தவிர, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது வெப்பம் வாட்டி வருகிறது. எனினும், பருவ மழை தொடங்கியிருப்பதால், தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Plus

leave a comment

Create AccountLog In Your Account