சிறார் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வுக் கருத்தரங்கம் முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் நடைபெற்றது

சிறார் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வுக் கருத்தரங்கம் முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் நடைபெற்றது

சிறார் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வுக் கருத்தரங்கம் முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் நடைபெற்றது

அன்றாட வாழ்வில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளிலிந்து அவர்களைத் தடுத்து விழிப்புணர்வு மிகுந்த சமுதாயமாக மாற்றும் முயற்சியில் முகப்பேர் வேலம்மாள் பள்ளி விழிப்புணர்வுக் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. இக் கருத்தரங்கத்தில் பெண் குழந்தைகள் நாள்தோறும் சந்தித்து வரும் வன் கொடுமைகளும் அவற்றிற்குரிய காரணங்களும் விவாதிக்கப்பட்டன. பாதுகாப்பற்ற சமுதாயச் சூழலில் மாணவியர் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் அறிவுறுத்தப்பட்டன. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காணெலிக் காட்சிகள் ககாண்பிக்கப்பட்டன. பெற்றோர், ஆசிரியர் மற்றும் சட்டத்துறை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. மேலும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றத்திற்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. இறுதியாக சூழ்நிலைக் கைதியாக மாறிவிடாமல் ஒவ்வொரு பெண் குழந்தையும் சமூக அவலத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற உறுதி மொழீ ஏற்கப்பட்டது.

Chennai Plus

leave a comment

Create AccountLog In Your Account