சீனாவில் நவீன யுக டிராம் பஸ்

சீனாவில் நவீன யுக டிராம் பஸ்

சீனாவில் நவீன யுக டிராம் பஸ் இயக்கபட இருக்கிறது. லேண்ட் ஏர்பஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த பஸ் மாடலை சீனாவை சேர்ந்த டிரான்ஸ்போர்ட் எக்ஸ்ப்ளோரர் பஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. சாலையின் இருமருங்கிலும் அமைக்கப்பட்டிருக்கும் தண்டவாளத்தில் செல்லும் இந்த பஸ் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் அதிக இடைவெளியுடன் உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. கீழே வாகனங்கள் தங்கு தடையின்றி செல்ல முடியும்.

சீனாவின் கின்ஹுவாங்டாவ் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் 300 மீட்டர் நீளமுடைய சோதனை ஓட்ட தடத்தில் இந்த பஸ் இயக்கி ஆய்வுகள் செய்யப்படுகின்றது. 300 பேர் முதல் 1,400 பேர் வரை இந்த பஸ்சில் பயணிக்க முடியும். இந்த பஸ் மணிக்கு 60 கிமீ வேகத்தில் இயக்க முடியும். தண்டவாள அமைப்பில் பயணிப்பதால், வளைவுகளில் கூட வேகத்தை அதிகமாக குறைக்க வேண்டியிருக்காது.

மாடி பஸ் போன்று இருக்கும் இந்த பஸ்சின் மேல்புறத்திற்கு செல்வதற்கு வசதியாக லிஃப்ட் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. நிறுத்தங்களில் பயணிகள் இறங்கும்போது பின்னால் வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை கொடுப்பதுடன், தானியங்கி முறையில் தடுப்புகளும் செயல்படும்.

மெட்ரோ ரயில் போன்ற போக்குவரத்து சாதனங்களைவிட இந்த பஸ்சிற்கான கட்டமைப்புகளுக்கான செலவு குறைவே ஆகும். எனவே, சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக முடிந்தவுடன், சாதாரண சாலையில் வைத்து இந்த பஸ்சை இயக்க அனுமதி கோர இருக்கின்றனர்.

இந்த பஸ்சின் கீழ் பகுதியில் கார்கள் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் மட்டுமே கடந்து செல்ல முடியும். டிரக்குகள் போன்ற கனரக வாகனங்கள் கடந்து செல்வது கடினமாக இருக்கும்.

Chennai Plus

leave a comment

Create AccountLog In Your Account